சென்னை, 2022, மார்ச் 17: விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் நாளும் நாளும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாகவும், லஷ்மி கண்ணம்மாவிடம் சொந்த பிள்ளையாகவும் வளர்ந்து வர, லஷ்மி தன் அப்பாவை தேடி அலைந்து வருகிறார். ஆனால் அவருடைய அப்பா பாரதி என்கிற உண்மையை அவரிடம் சொல்ல முடியாமல் கண்ணம்மா ஒருபுறம் தவிக்க, இன்னொருபுறம், தனக்கு ஒரு தாய் வேண்டும், தன் தந்தையை பார்த்துக்கொள்ள ஒரு பெண் வேண்டும் என ஹேமா சில நாட்களாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
அதன்படி கண்ணம்மா என்கிற சமையல் அம்மா தான் தன் தந்தையை பார்த்துக் கொள்வதற்கும், தனக்கு தாயாய் இருப்பதற்கும் தகுதியானவர் என நினைத்த ஹேமா, இந்நிலையில் தான் லஷ்மியிடம், “நான் ஒன்னு கேட்டால், கோபப் பட கூடாது” என்று டிஸ்க்ளெய்மர் போட்டுவிட்டு, “உங்க அப்பா வரப் போறதில்லனு சொல்றாங்க. உனக்கும் டாடி இல்ல, எனக்கு மம்மி இல்ல, ஏண் நம்ம அப்பா அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிர கூடாது? பேசாம அவங்க 2 பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிரலாமா?” என கேட்கிறார்.
உடனே கோபம் வந்துவிட்ட லஷ்மி பொங்கி எழுந்து ஹேமாவை அடிக்கவே போய்விட்டார். “கோவம் தான் வருது, கோவப்படாமல் என்ன செய்ய சொல்ற? எங்க அப்பா எங்களோட இல்ல, அவ்வளவுதானே தவிர, அவர் இல்லவே இல்லைனு முடிவு பண்ணிட்டீங்களா? அவரை எங்க இருந்தாலும் நான் தேடி கண்டுபிடிச்சு வந்து நிறுத்துவேன்.!” என சொல்லிவிட்டார்.
குழந்தை ஹேமாவின் அடுத்த கட்ட யோசனைகளால், பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேருவார்கள் என நினைத்துதான், பாரதியின் தாய் சௌந்தர்யா, குழந்தை ஹேமாவிடம், “லஷ்மியின் அப்பா இனி வரவே போவதில்லை” என சொல்லிவிட்டார். அதை நம்பி லஷ்மியிடம் வந்து கேட்ட ஹேமாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.