ஹரிஷ் கல்யாண் - விவேக் கூட்டணியில் உருவாகியுள்ள 'தராளா பிரபு' பட 'ஆஹா ஓஹோ' பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தனுசு ராசி நேயர்களே' படத்துக்கு பிறகு, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தாராள பிரபு'.  ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'விக்கி டோனர்' பட தமிழ் ரீமேக்கான இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.

Harish Kalyan and Vivekh's Dharala Prabhu Aaha Ooho Song is Out

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்துக்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, Madly Blues, Oorka - the band, ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின் உள்ளிட்டோர் இசையமைக்கின்றனர். இந்த படத்தின் பின்னணி இசையை பரத் சங்கர் மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஆஹா, ஓஹோ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை Oorka என்ற குழு இசையமைத்துள்ளது. இந்த பாடலை பரத் சங்கர் எழுதி பாடியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் - விவேக் கூட்டணியில் உருவாகியுள்ள 'தராளா பிரபு' பட 'ஆஹா ஓஹோ' பாடல் இதோ வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan and Vivekh's Dharala Prabhu Aaha Ooho Song is Out

People looking for online information on Anirudh Ravichander, Dharala Prabhu, Harish Kalyan, Vivekh will find this news story useful.