தமிழின் முன்னணி தயாரிப்பாளராக விளங்கிய ஏ எம் ரத்னம் இந்தியன், நட்புக்காக, குஷி, கில்லி, சிவகாசி,சுக்ரன்,பீமா போன்ற படங்களை தயாரித்தவர்.
பின்னர் அவர் தயாரித்த படங்கள் தோல்வியை தழுவியதால் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார். 2012ஆம் ஆண்டு மீண்டும் தல அஜித்தின் அழைப்பின் பெயரில் சினிமா தயாரிப்புக்கு மீண்டும் வந்தார். ஆரம்பம் (2013), என்னை அறிந்தால் (2015), வேதாளம் (2015) என தொடர்ச்சியாக மூன்று படங்களுக்கு அஜித் இவருக்கு கால்ஷீட் கொடுத்தார். மூன்று படங்களும் பெரிய வெற்றி பெற்றவுடன் மீண்டும் படத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
விஜய் சேதுபதியை வைத்து கடைசியாக "கருப்பன்"(2017) படத்தை தமிழில் தயாரித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யானை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று திரைப்படத்தை தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ஹரிஹர வீர மல்லு என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் ஞானசேகர் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் இந்தப் படம் உருவாகிறது. இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்தி அகர்வால் மற்றும் ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார். இந்த திரைப்படம் பவன் கல்யாணின் இருபத்தி ஏழாவது திரைப்படமாக உருவாகிறது. சில தினங்களுக்கு முன் நடிகை நித்தி அகர்வால், பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் கதாபாத்திரத்தின் பிரத்தியேக போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், அது பற்றி பேசிய புகைப்படத்தை தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் வெளியிட்டுள்ளார். இதில் பவன்கல்யானுடன் இயக்குனர் கிரிஷ் உள்ளார்.
Met Our #HariHaraVeeraMallu @PawanKalyan garu along with our Captain @DirKrish & discussed forthcoming schedules of Epic Adventure @HHVMFilm
Shoot resumes very soon⚡
Witness the Periodic Extravaganza in theatres, 29 April 2022 🔥@mmkeeravaani @ADayakarRao2 @MegaSuryaProd pic.twitter.com/lq7ojm6w8Y
— AM Rathnam (@AMRathnamOfl) September 7, 2021