ஹர்பஜன் சிங் ஃப்ரென்ட்ஷிப்பில் ஆக்‌ஷன் ...! பிக்பாஸ் லாஸ்லியா படத்தின் செம ஆப்டேட் இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிக்கும் ஃப்ரென்ட்ஷிப் படத்தில் பிரபல ஹீரோ இணைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

harbajan singh losliya friendship movie ropes arjun in

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடினார். அச்சமயத்தில் ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வெளியான ட்வீட்டுகள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவரை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன. இதை தொடர்ந்து ஹர்பஜன் தமிழில் ஃப்ரென்ட்ஷிப் எனும் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான லாஸ்லியா இத்திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் ஃப்ரென்ட்ஷிப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்குகின்றனர். அண்மையில் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கலக்கிய அர்ஜுன், இத்திரைப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Harbajan singh losliya friendship movie ropes arjun in

People looking for online information on Arjun Sarja, Friendship, Harbajan, Losliya will find this news story useful.