www.garudavega.com

திருமணத்திற்கு பிறகான சடங்கு.. மாப்பிள்ளை வீட்டாருக்கு சமைத்த ஹன்சிகா.. அதுவும் இந்த உணவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

Hansika Motwani Cooked Her Post wedding Pehli Rasoi

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்ய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோரின் திருமணம், ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற்றது.

ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மேலும், இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்  வைரலாகியது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிந்தைய Pehli Rasoi சடங்கில் ஹன்சிகா மோத்வானி பங்கேற்று மாப்பிள்ளை வீட்டாருக்கு அல்வா சமைத்து பரிமாறியுள்ளார்.

Hansika Motwani Cooked Her Post wedding Pehli Rasoi

Pehli Rasoi, என்பது திருமணத்திற்கு பிறகு மணப்பெண், மணமகன் வீட்டாருக்கு காலை உணவு சமைத்து பரிமாற வேண்டும். இந்த சடங்கு வட இந்தியாவில் மிகப் பிரபலமான ஒன்று. மணப்பெண்ணின் சமையல் திறனை சோதிக்கும் வகையில் இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Motwani Cooked Her Post wedding Pehli Rasoi

People looking for online information on Halwa, Hansika, Hansika Motwani, Pehli Rasoi will find this news story useful.