Reliable Software
www.garudavega.com

பார்த்திபன் பட பாணியில் ஹன்சிகாவின் புதிய படம்!.. கூடவே இன்னொரு சர்ப்ரைசும் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்த்திபன் தமிழில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் தான் மட்டுமே நடித்திருப்பார். நான் -லீனியர் திரை பாணியில் உருவான இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

Hansika Motwani 105 Minutes single shot single actor movie

இதே பாணியில் தற்போது ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் 105 மினிட்ஸ் எனும் தெலுங்கு படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். அத்துடன் இந்த படத்தின் கூடுதல் சிறப்பாக, ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கபடவுள்ளது. சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் தெலுங்கு படம் என்கிற சாதனையை இப்படம் படைக்கவுள்ளது.

Hansika Motwani 105 Minutes single shot single actor movie

தெலுங்கு திரையுலகில், முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை கொண்ட இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரமாக தான் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி என்றும் இயக்குநர் ராஜா துஷ்ஷா தன்னிடம் இந்த கதையை கூறியபோது மிகவும் வித்தியாசமாக, ஆர்வத்தை தூண்டுவதாக இருந்ததாகவும் ஹன்சிகா இதுபற்றி பேசும்போது குறிப்பிட்டுளார்.  மேலும், திரைக்கதை பரபர திரில் பயணமாக இருந்ததாகவும், படத்தின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்ததாகவும், குறிப்பாக படத்தின் நீளமும் கதை நேரமும் “105 மினிட்ஸ்” தான் என்றும் படத்தின் தலைப்பும் அதுவே தான் என்றும் இது புதுமையாக இருந்ததாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

Hansika Motwani 105 Minutes single shot single actor movie

ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இளம்பெண்ணை பற்றியது தான் இந்தக்கதை என கூறிய ஹன்சிகா,  படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துளார். மே 3 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

பொம்மக் சிவா இப்படத்தினை தயாரிக்கிறார். படத்தின் தொழில்நுட்ப குழுவினர் மற்றும் இதர விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ALSO READ: டைட்டானிக்.. அவதார்.. படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த தயாரிப்பு.. பிரபல OTT-யில்!

மற்ற செய்திகள்

Hansika Motwani 105 Minutes single shot single actor movie

People looking for online information on 105minutes, Hansika Motwani will find this news story useful.