www.garudavega.com
iTechUS

"துணிவு, சிவகார்த்திகேயன் நடித்திருந்தால்.. இந்த விஷயத்தை சேத்துருப்பேன்".. H. வினோத் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஹெச். வினோத், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனல் நடத்திய ரசிகர்கள் திருவிழாவில் கலந்து கொண்டார்.

H Vinoth Talks about if Thunivu Movie with SivaKarthikeyan

Also Read | குட் நியூஸ் சொன்ன துணிவு பட வில்லன் ஜான் கொக்கன்.. நடிகை பிக்பாஸ் பூஜா கர்ப்பம்!

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர்  H.வினோத், சமூகவியல் மற்றும் அரசியல் குற்றம் தொடர்பான படங்களை படமாக்க கூடிய வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்.  H.வினோத், சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார்.

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.  'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

H Vinoth Talks about if Thunivu Movie with SivaKarthikeyan

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. Vinoth Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது துணிவு படம் குறித்தும், நடிகர் அஜித் குறித்தும் பல தகவல்களை வினோத் பகிர்ந்துள்ளார்.

H Vinoth Talks about if Thunivu Movie with SivaKarthikeyan

குறிப்பாக "நீங்கள் திரைக்கதை எழுதும் போது துணிவு படத்தில் அஜித் சார் நடிக்காமல் வேறு ஒரு நடிகர் நடித்தார் எனில் இரண்டாம் பாதியில் சில்லா சில்லா பாடல் இருந்திருக்குமா?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த இயக்குனர் H. வினோத், "இப்போ உதாரணத்திற்கு சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று வைச்சுக்குவோம். இன்னும் 2,3 பாட்டு கூடுதலாக தான் இருந்திருக்கும்." என வினோத் பதில் அளித்துள்ளார்.

Also Read | பத்மஶ்ரீ விருது வென்ற புகழ்பெற்ற மருத்துவருடன் 'வாரிசு' விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்!

"துணிவு, சிவகார்த்திகேயன் நடித்திருந்தால்.. இந்த விஷயத்தை சேத்துருப்பேன்".. H. வினோத் EXCLUSIVE! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Talks about if Thunivu Movie with SivaKarthikeyan

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thunivu will find this news story useful.