ஐதராபாத்: வலிமை படத்தின் ஐதராபாத்த்தில் நடந்த முன் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர் எச். வினோத் பேசியுள்ளார்.
வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
வலிமை படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வலிமை படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 750க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக வலிமை படத்தின் வினியோகஸ்தர் கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
படத்தின் ரிலீசை முன்னிட்டு ஐதராபாத்தில் நடந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் எச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹூமா குரேஷி, வில்லன் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய எச். வினோத் கூறியதாவது.... "வலிமை படம் நல்ல ஆக்சன் & மனித உணர்வுகள் உடன் இருக்கும்மேலும் வலிமை படம் தீரன் படத்தை விட சிறந்த அனுபவத்தை படம் பார்க்கும் போது தரும். பிப்ரவரி 24 ஆம் தேதி வலிமை படத்தை பார்க்கவும், மேலும் பவன்கல்யானின் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வந்து எங்கள் வலிமையைப் பாருங்கள்..படத்தை ஆதரிக்கவும்" என கூறினார்.
வலிமை படத்தின் தெலுங்கு பதிப்பு சில நாட்களுக்கு முன் சென்சாராகி உள்ளது. தமிழ் பதிப்பை விட தெலுங்கில் ஒரு நிமிடம் கூடுதல் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழில் நீக்கியது போல் தெலுங்கில் சில காட்சிகள் நீக்கப்படவில்லை. இதனால் தமிழை விட தெலுங்கில் படம் இன்னும் வீரியமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
CBFC சென்சாரில் வலிமை படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.