நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
வரும் 2023 பொங்கலுக்கு (11.01.2023) துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்.
சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் துணிவு படம் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். "துணிவு எந்த மாதிரியான படமா ரசிகர்களுக்கு இருக்கும்?" என்ற கேள்விக்கு, "ஜாலியா வந்து பாருங்க. முதல் பாதி பயங்கரமா ரசிகர்களுக்கு ஜாலியாக பொழுது போக்கு படமா இருக்கும். இரண்டாம் பாதி ரசிகர்கள், குடும்பங்கள், சினிமா ரசிகர்கள் எல்லாருமான படமா இருக்கும். எந்த ஜானர் உள்ளயும் துணிவு படத்தை அடக்க வேண்டியதில்லை. முழு பொழுதுபோக்கு படமா, ரசிகர்கள் கத்துக்க கூடிய படமா இருக்கும்". என வினோத் பதில் அளித்துள்ளார்.