www.garudavega.com

"சபரிமலையில் துணிவு பேனர்.. அஜித் FANS பண்ணது டச்சிங்கா இருந்தது".. நெகிழ்ந்து பேசிய H. வினோத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

H Vinoth about Ajith Fans Banner in Sabarimala Temple

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

H Vinoth about Ajith Fans Banner in Sabarimala Temple

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

H Vinoth about Ajith Fans Banner in Sabarimala Temple

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது.

H Vinoth about Ajith Fans Banner in Sabarimala Temple

இந்நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் கலைஞர் தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் துணிவு படத்தின் பேனரை ஏந்தி ரசிகர்கள் சாமி தரிசனம் செய்த போட்டோவை இயக்குனர் வினோத்தின் நண்பர் சந்தோஷ் வினோத்திடம் பகிர்ந்துள்ளார்.

அப்போது அவரிடம், "சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒருவன் போறதே. அவன் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளை கடவுளிடம் வேண்டுதல் வைக்க போறான். சபரிமலையில் துணிவு படம் பத்தி ஒரு குரூப் அங்கே இதை பண்ணிருக்காங்க அப்படின்றதே டச்சிங்கா இருந்தது." என வினோத் கூறினார். தற்போது ஹெச். வினோத் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth about Ajith Fans Banner in Sabarimala Temple

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Sabarimalai, Thunivu will find this news story useful.