நடிகர் கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளார்.
Also Read | புதிய படத்தில் கார்த்திக்கு ஜோடியான பிரபல முன்னணி நடிகை! வெளிவந்த சூப்பர் அப்டேட்!
'விருமன்' 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' படங்களுக்கு பிறகு கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படம் ஜப்பான். இந்த படத்தினை இயக்குனர் ராஜூ முருகன் இயக்க உள்ளார்.
எழுத்தாளரும், இயக்குனருமான ராஜூ முருகன் கடந்த 2014 ஆம் ஆண்டு 'குக்கூ' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய இரண்டாவது படம் ஜோக்கர். இது சமூகத்தை கேள்வி கேட்கும் நாயகனின் கதையை அடிப்படையாகக் கொண்டு தேசிய விருதை வென்றது. இந்தப் படம் பெரும்பான்மையான மக்களால் பாராட்டப்பட்டது. கடைசியாக 'ஜிப்சி' படத்தை ராஜூ முருகன் இயக்கினார்.
'சகுனி', 'காஷ்மோரா', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி', 'சுல்தான்' என 5 சூப்பர்ஹிட் திரைப்படங்களைத் தொடர்ந்து 6-வது முறையாக ’ஜப்பான்’ மூலம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நாயகனாகியிருக்கிறார்.
மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார். கார்த்தியுடன் பொன்னியின் செல்வன், காற்று வெளியிடை படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார்.
2020ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கனவே கார்த்தி - ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்ய ஜிவி பிரகாஷ்குமார் மும்முரமாகத் தயாராகியுள்ளார்.
'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது.
Also Read | கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படம்.. பூஜை அன்றே வெளியான படத்தின் தலைப்பு!