சூர்யா - வெற்றிமாறன் இணையும் 'வாடிவாசல்' - படத்தை பற்றிய மாஸ் தகவல்கள் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவுடன் வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனம் திறந்துள்ளார். 

சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் பற்றிய தகவல் | gv prakash opens on suriya vetrimaran vaadivaasal

சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். செல்லப்பா எழுதிய வாடிவாசல் எனும் நாவலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. 

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது வாடிவாசல் படம் குறித்து கேட்டதற்கு, ''இசை ரீதியில் இது ரொம்பவே முக்கியமான படம். நமது வேர்களில் கலந்திருக்கும் இசை, இப்படத்தில் நிரம்பியிருக்கும். ஜல்லிக்கட்டுக்காக ஒரு ஸ்பெஷல் தீம் மீயுசிக் அமைக்கவுள்ளோம். மேலும் காளைகளுக்காகவும் ஒரு மாஸான தீம் இருக்கும். ஒரு ஐடியாவாக பேசி கொண்டிருக்கிறோம்' என தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் பற்றிய தகவல் | gv prakash opens on suriya vetrimaran vaadivaasal

People looking for online information on GV Prakash, Suriya, Vaadivaasal, Vetri Maaran will find this news story useful.