சூர்யாவின் சூரரைப் போற்று : அடுத்த பாடலில் அசுரன் காம்போ...தனுஷ் பாடிய பாடல்.! - ஜிவிபிரகாஷ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் அடுத்த சிங்கிள் குறித்து ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் | gv prakash opens about next single of suriya's soorarai pottru and dhanush

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விமான சேவை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் சூரரைப் போற்று படத்தில் இருந்து வெளியான வெய்யோன்சில்லி பாடல் ஹிட் அடித்தது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், இன்னும் சில தினங்களில் சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என நினைக்கிறேன். ராவான ஃபோக் பாடலுக்கு ரெடியாக இருங்கள். இதை எழுதியவர் என் ஃபேவரைட் ஏகாதேசி' என அவர் தெரிவித்துள்ளார். ஒத்த சொல்லால, கத்தரி பூவழகி ஆகிய பாடல்களில் இந்த கூட்டணி இதற்கு முன்பு கலக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்த ஜெயில் படத்தை பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு, 'விரைவில் படம் வெளியாகும். படம் மிக அருமையாக வந்துள்ளது. தனுஷ் பாடிய காதோடு பாடல் விரைவில் வெளியாகும்' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் | gv prakash opens about next single of suriya's soorarai pottru and dhanush

People looking for online information on Dhanush, GV Prakash Kumar, Jail, Soorarai Pottru, Suriya will find this news story useful.