வெயில் படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது 75 படங்களுக்கு மேல் இசையமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இசை மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கால்பதித்துள்ள இவர் பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். Trap City என்ற இந்த படத்தை டெல் கணேசன் க்வைபா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டெல் கணேசன் தயாரிக்கிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் ஜாக்சன் நடிக்கிறார்.
ஒரு ராப் பாடகரின் வாழ்க்கையை இந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் மேலும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். தளபதி 65 படத்தில் ஜி.வி.பிரகாஷ் இருக்கிறாரா இல்லையா, ஹாலிவுட் வாய்ப்பு பற்றி சைந்தவி ரியாக்ஷன், சூர்யாவுடன் மாறா தீம் ம்யூசிக்கை உருவாக்கிய விதம் என்று பல விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.