ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்து ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன் போன்ற படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.
இந்நிலையில் ஜி.வி. பிராகாஷ்குமார் தனது அடுத்தபடம் பற்றிய தகவலை டிவிட்டரில் சில நாட்கள் முன்பு அதிகாரப்பூர்வமாக பகிர்ந்தார். அதில் முதல்முறையாக தேசிய விருதுப்பெற்ற தென் மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைவதாகவும், இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரிப்பதாகவும் அறிவித்தார்.
இப்படத்தில் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர் கதாபாத்திரத்தில், பள்ளி மாணவி, செவிலியர் மற்றும் ஒரு தாய் என மூன்று நிலைகளிலும் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.
இயக்குநர் சீனு ராமசாமியுடன் 'தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நீர் பறவை' போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் NR ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார். ஆக்சன் திரில்லர் வகைமையில் (Genre) இந்தப்படம் உருவாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் தேனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.
இதனை படத்தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
We are elated to announce 📣 that @kalaimagan20 ‘s @SkymanFilms production no.2 🎥 shooting 🎬 has begun today@seenuramasamy @gvprakash
More updates reveal soon ⌛️@DoneChannel1 @CtcMediaboy#Skymanfilms #SkymanFilmsPN2 pic.twitter.com/NzM3lNSMNH
— SKYMAN FILMS INTERNATIONAL (@SkymanFilms) August 2, 2021