www.garudavega.com

ஜீ.வி.பிரகாஷின் 'ஐங்கரன்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸா? எதுல? எப்போ? தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ரவிஅரசு, தன் முதல் படமாக, அதர்வா நடிப்பிலான ஈட்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

GV Prakash Ayngaran movie RaviArasu SonyLiv OTT release

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது ஈட்டி திரைப்படம். நடிகர் அதர்வா முரளி, ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், திருமுருகன் மற்றும் பலர் நடித்தனர். இதில் அதர்வா முரளி ஒரு தடகள வீரராகவும், அதே சமயம் அவர் தன் உடலில் ஒரு பிரச்சனையுடன் இருப்பார். ஆனால் அதை கடந்து எவ்வாறு சாதிக்கிறார் என்பதை காதல், ஆக்‌ஷன், ஸ்போர்ட்ஸ் என ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டு வெளியான ‘ஈட்டி’ திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன.  இந்த படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். இந்நிலையில் தான் இதே காம்போ, அதாவது ஈட்டி படத்துக்கு இசையமைத்த ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க,  ஐங்கரன் எனும் திரைப்படத்தை இயக்குநர் ரவிஅரசு தமது 2வது படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் மகிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார்.

2017-ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தை காமன்மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீடு கொரோனாவுக்கு முன்பிருந்தே பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.

பின்னர் கொரோனாவினால் இன்னும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில், தற்போது இந்த படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தை ஒட்டி, அதற்கு முன்னதான தேதிகளிலோ அல்லது சுதந்திர தினத்தன்றோ நேரடியாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படம் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்பதுடன், மாறுபட்ட கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு, முன்பிருந்தே எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு இப்போது உறுதியாகியுள்ளது. 

ALSO READ: தனுஷ் பிறந்த நாள்... "ஹாலிவுட் கதவுகள் தானாக திறக்கும்.. கோலிவுட் நாயகன்".. வாழ்த்து சொன்னது யார் பாருங்க!

மற்ற செய்திகள்

GV Prakash Ayngaran movie RaviArasu SonyLiv OTT release

People looking for online information on Ayngaran, Eetti, Ravi Arasu, Raviarasu will find this news story useful.