சென்னை : மின்னல் முரளி என்ற மலையாளப் படம் கடந்த வாரம் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுளளது. இப்படத்தில் சூப்பர் வில்லனராக நடித்துள்ள குருசோமசுந்தரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரளாவில் சமூக வலைதளம் முழுக்க குருசோமசுந்திரம் பற்றித்தான் பேச்சாக உள்ளது. என்ன மனுசுன்யா இவரு.. இப்படி நடிச்சிருக்காரு என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஜோக்கர் நடிகர்:
2010 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரண்யகாண்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் குரு சோமசுந்தரம். இவர் கமல் நடிப்பில் வெளிவந்த தூங்காவனம், ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார். பாண்டிய நாடு மற்றும் ஜிகர்தண்டா போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானவர். 2016ஆம் ஆண்டு வெளிவந்த ராஜுமுருகனின் ஜோக்கர் படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இவர் தற்போது மின்னல் முரளி என்ற மலையாள படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
பட்டய கிளப்புது.. "வலிமை" பட பைக் ஸ்டண்ட்டால் மிரண்டு போன ஹாலிவுட்!
மின்னல் முரளி:
Weekend Blockbusters தயாரிப்பில், டோவினோ தோமஸ், குரு சோமசுந்தரம் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் சுசின் ஷாம் மற்றும் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளனர். இது சூப்பர் ஹீரோ படமாகும். கடந்த வாரம் நெட்ப்ளிக்ஸ்சில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஷிபு கதாபாத்திரம்:
இந்த படத்தில் குரு சோமசுந்தரம் ஷிபு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுபற்றி குரு சோமசுந்தரம் கூறியதாவது, நடிகை நீலிமா படம் பார்த்துவிட்டு மூன்று நாட்களாக எனக்கு கால் செய்ய வேண்டும் என நினைத்தாராம், அதன்பின் கால் செய்தவர் எப்படி இந்த மாதிரி நடிக்கிறீர்கள் எனக் கேட்டார். மேலும் வலியில் இருக்கும் ஒருவன் சிரிப்புகள் கலந்த அந்த நடிப்பை வெளிப்படுத்துவது மிக கடினம், அதை எப்படி செய்தீர்கள் எனக் கேட்டார்.
மீண்டும் ஒன்று சேர்ந்த அண்ணாத்த படக்குழுவினர்.. என்னவா இருக்கும்.. ரசிகர்கள் குழப்பம்!
எப்படி பாத்திரம்
அதற்கு நான் (குரு சோமசுந்தரம்) கூறுகையில், இந்த படத்தில் நகம் பெரிதாக வைத்திருந்தேன், தாடியும் அதிகமாக இருக்கும். அதன்பின் "உஷா என்ற கதாபாத்திரம் வருவது தெரிந்தவுடன் தாடி, நகம் எல்லாத்தையும் எடுத்து விடுவேன். அதுதான் பழைய காதலி திரும்ப வருகிறாள் என்று தெரிந்தவுடன் அவனைப் பற்றியே அவனுக்கு அக்கறை இல்லாத போது தன் காதலி வந்தவுடன் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்கிறான் என்ற கதாபாத்திரம் தான் அந்த ஷிபு" என்று கூறினேன்
வில்லன்:
ஒரு படத்தில் வில்லன் என்பது கட்டுக்கோப்பான உடலையும் அசட்டுத்தனமான நடிப்பையும் கொண்டிருப்பார்கள். அது அவசியம் தான். ஆனால், இப்போது அது குரு சோமசுந்தரத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டுகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நம்பரை எடுத்து, ஒரு கர்ப்பிணி பெண் குரு சோமசுந்திரத்திற்கு கால் செய்தாராம் அதில் அவர், இது டெலிவரி மாதம் அதனால் தான் நேரில் வர முடியவில்லை, உங்க நடிப்பு மிக அருமை என பேசினார். மேலும் நடிப்பை எல்லோரும் பாராட்டி பதிவிடுவது மிகுந்த நெகழ்ச்சியை தருகிறது என்று குரு சோமசுந்தரம் கூறினார்.
என்னுடைய வாழ்க்கை மாதிரி:
மேலும் அவர் கூறும் போது, ஷிபு என்ற கதாபாத்திரம் கிட்டத்தட்ட சோமசுந்தரத்தின் Graft தான். என்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் தான் இப்படம் நடித்தேன். அதனால் என்னவோ மிகச் சுலபமாகவும் இருந்தது. படத்தின் இயக்குனர் பேசில் ஜோசப் இப்படத்தில் நடிக்கும் முன்பு ஜோக்கர்(ஹாலிவுட்) படத்தை பார்க்க சொன்னார். அது அவருக்கு மிகவும் பிடித்த படம். ஆனால் இந்தப் படம் முடியும் வரை அந்தப் படம் பார்க்க மாட்டேன் என நினைத்து வைத்திருந்தேன். அதன்பின் இயக்குனர் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக படம் பார்க்கிறேன் என பொய் சொல்லி இருந்தேன், எனக் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார்.
குருசோமசுந்திரம் தற்போது தமிழில் ‘மாமனிதன்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘இந்தியன் 2’, சோனி லைவ்வில் ’மீம் பாய்ஸ்’ வெப் சீரிஸ் பண்ணிருக்கிறார். சசிக்குமார் உடன் நடித்த‘பரமகுரு’ படம் முடியவிருக்கிறது. மலையாளத்தில் ஒரு படம் முடித்து உள்ளார். இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது