www.garudavega.com

RAJINIKANTH : “ஆமாங்க.. இது கெஸ்ட் ரோல்..” .. ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிப்பது குறித்து ரஜினி சொன்னது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

guest role says rajinikanth on aishwarya movie Lal Salaam

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவில் இயக்குனராக திகழுபவருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ள தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில், நவம்பர் 5-ஆம் தேதி இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில்தான், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிக்கும் இப்படத்திற்கு  ‘லால் சலாம்’ என்று தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்துக்கு இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  இப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார். பிரவீன் பாஸ்கர் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பூஜைக்காக தமது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், காரில் வரும்போது வழியின் நின்ற செய்தியாளர்களுக்கு கையசைத்தார். பின்னர் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டபோது, “ஆமாங்க .. இது கெஸ்ட் ரோல்” என பதில் அளித்துவிட்டு, ரசிகர்களை நோக்கி உற்சாக தம்ப்ஸ் அப் செய்த கையோடு எனர்ஜியுடன் புறப்பட்டார்.

முன்னதாக அதிக வருமான வரி செலுத்துவதற்காக, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில சார்பில் வழங்கப்பட்ட கௌரவ சான்றிதழை, தமது தந்தை சார்பில் சென்று பெற்றுக்கொண்ட இயக்குநர் ஐஸ்வர்யா, பெருமையான மகளாக உணர்ந்ததாகவும் தமது பதிவில் அச்சமயத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் அவரது தந்தையான சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Guest role says rajinikanth on aishwarya movie Lal Salaam

People looking for online information on Aishwarya Rajinikanth, Lal Salaam, Rajinikanth will find this news story useful.