பிக்பாஸ் வீட்டுக்குள் கிராண்ட் ஃபினாலே ரேஸ் களைகட்டியுள்ளது. இதற்கென பிக்பாஸ் ஒரு புதிய டிக்கெட்டை அறிமுகப்படுத்தினார்.
கிராண்ட் ஃபினாலே டிக்கெட்
கிராண்ட் ஃபினாலே டிக்கெட் என பெயரிடப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த டிக்கெட்டை அடைவதற்கு, இந்த முறை ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் சற்றே புதுமையானது.
அனைவரையும் ஒரு இரவு வேளையில் டெலிசியஸான டின்னர் சாப்பிடுவதற்காக பிக்பாஸ் பணித்தார். அப்போது டின்னர் சாப்பிட்டுக்கொண்டே அனைவரும் கிராண்ட் ஃபினாலேவுக்கான இந்த டிக்கெட் யாருக்கு தேவையில்லை? ஏன்.? என்பதை பேச வேண்டும்.
Openingலாம் நல்லாத்தான் இருக்கு
மேலும், ஏன் தங்களுக்கு அந்த ஃபினாலே டிக்கெட் தேவை என்றும் சொல்ல வேண்டும். இதுதான் இந்த முறை பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க். இதில் முதலில் அனைவரும் ஆரவாரமாக சாப்பிட்டுக்கொண்டும் சிரித்துக்கொண்டும், சக போட்டியாளர்களுள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு போட்டியாளருகும் ஏன் ஃபினாலே டிக்கெட் தேவையில்லை என பேசத் தொடங்கினர்.
தொடங்கிய பிரச்சனை
ஆனால் போகப் போக விஷயம் சீரியஸ் ஆனது. வார்த்தைகள் கிட்டத்தட்ட உரசிக்கொள்ளத் தொடங்கின. குறிப்பாக, தங்களுக்கு ஏன் அண்ட்த டிக்கெட் தேவை என போட்டியாளர்கள் சொல்லும்போது பெரிய அளவில் பிரச்சனைகள் எழவில்லை.
ஆனால், இன்னொரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு ஏன் அந்த டிக்கெட் தேவையில்லை என காரணத்துடன் சொல்லும்போது, குறிப்பிட்ட அந்த போட்டியாளர் தங்களை பற்றிய விமர்சனத்தை மறுத்து பேசினர்.
எதுதான் உண்மையான தாமரை?? ஜட்ஜ் பண்ண முடியல!
இந்நிலையில், தாமரைக்கு ஃபினாலே டிக்கெட் தேவையில்லை என சொன்ன அமீர், அதற்கு விளக்கம் அளிக்கும்போது, “பாவனி நாமினேட் செய்து முடித்த பின், அவரிடம் அதுபற்றி கேட்டபோது, புரியவில்லை என்கிறார். அதன் பின் இருப்பவர் தாமரையா? அதற்கு முன் இருப்பவர் உண்மையான தாமரையா? என புரியவில்லை.
ராஜூவை தவிர, எல்லாரிடமும் கோவப்படுகிறார். அதனால் இப்போது இருக்கும் இதுதான் தாமரையா? இல்லை மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேசுகிறாரே அதுதான் உண்மையான தாமரையா? என என்னால் ஜட்ஜ் பண்ண முடியவில்லை!” என்று கூறினார். ஆனால் அமீர் சொன்ன காரணங்களை தாமரை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.