தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Also Read | Pan Indian '3D' படத்தில் நடிக்கும் மின்னல் முரளி ஹீரோ.. முதல் முறையாக ஜோடி சேரும் பிரபல தெலுங்கு நடிகை!!
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.
ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்து டாஸ்க்குகள் மூலம் சூடு பிடிக்கவும் தொடங்கி உள்ளது. போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விவாதங்களும் தற்போது தொடங்கி உள்ளதால் ரசிகர்களும் விறுவிறுப்பாக இதனை கண்டு களித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக என்ட்ரி கொடுத்தது முதல் இன்று வரை ஜிபி முத்து குறித்த விஷயங்கள் தான் அதிகம் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.
ஆர்மபத்தில் தனியாக இருப்பதால் பயந்து போய் கமலிடம் பேசி கவனம் ஈர்த்திருந்தார் ஜிபி முத்து. இதனைத் தொடர்ந்து, அவரை சக போட்டியாளர்கள் கூட சில விஷயங்களில் கலாய்த்துக் கொண்ட படி தான் இருந்தனர். ஆனாலும், தொடர்ந்து ஜிபி முத்துவுக்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலையில், தன்னை அடிக்கடி கலாய்த்து கொண்டிருந்த அமுதவாணனை தனது ஸ்டைலில் கலாய்த்த ஜிபி முத்துவின் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ஜிபி முத்துவிடம், எல்லாரும் உங்களை அண்ணன் என அழைக்கிறார்களே, அது உங்களுக்கு ஃபீலிங்காக இல்லையா என கேட்கிறார் அமுதவாணன். இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, "10 வயசாக இருந்தால் கூட என்ன, என்னை அண்ணன், சித்தப்பா, மாமா என என்ன வேண்டுமானாலும் கூப்பிடட்டும். தப்பே கிடையாது" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "உங்களை தான் அண்ணன் என் யாராவது அழைத்து விட்டால், அப்படியே பதறுகிறீர்கள். மூஞ்சும் மொகரையையும் பாரு" என அமுதவாணனுக்கு அவரது பாணியிலேயே பதில் சொல்கிறார் ஜிபி முத்து. பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை அதிகம் கலாய்த்து கொண்டிருந்த அமுதவாணனை வேற லெவலில் ஜிபி முத்து கலாய்த்த சம்பவம், தற்போது பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
Also Read | "14 வயசுலயே".. சொந்த கார் வாங்கிய பூவையார்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!