ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | “கையில் மிதக்கும் கனவா நீ”.. அலேகா தூக்கிய ராபர்ட் .. “அந்த காலம் அது டிடி காலம்”.. அமுது கலாய்
இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார். இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வந்திருந்தனர். இதேபோல் பொங்கல் விழாவை முன்னிட்டு பல சிறப்பு விருந்தினர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர்.
அதன்படி, விஜய் டிவியில் வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதல் திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள மகாநதி சீரியல் குழுவினர், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து தங்களது வரவிருக்கும் சீரியலின் ப்ரோமோவை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது ஒளிபரப்பான மகாநதி சீரியல் ப்ரோமோவை பார்த்துவிட்டு ஜிபி முத்து அழுதேவிட்டார்.
ப்ரோமோவில் தங்கள் அம்மாக்களுடன் இருக்கும் சகோதரிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன வெண்டும் என்கிற ஆசையை மலை உச்சியில் இருந்து சொல்ல, அப்போது கடைசி குட்டித் தங்கை மட்டும் அழுதுகொண்டே, “எனக்கு அப்பா வேண்டும்” என்கிறார். இவர்களின் அப்பாவாக முந்தைய பிக்பாஸ் போட்டியாளரும், பிரபல நடிகருமான சரவணன் நடித்துள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்துதான் ஜிபி முத்து அழுதுவிட்டார். அவரை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஜிபி முத்து அழுதுவிட்டார்.
பின்னர் அந்த சிறுமியையும் படக்குழுவையும் வாழ்த்திய ஜிபி முத்து, கேமரா முன்பாக நின்று பேசும்போது, “அந்த பொண்ணு நடிச்சத பார்த்து கண்கலங்கிட்டேன்.. இது குடும்ப சீரியல்.. நான் அதுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.. நீங்களும் பாருங்க” என மகாநதி சீரியலை தன் ரசிகர்களுக்கு ரெக்கமெண்ட் செய்தார்.