அரசே 'இலவசமாக' வழங்கினால் நல்லது... 'பிரபல' நடிகரின் மகள் கோரிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியூட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். தந்தையை போலவே சமூக அக்கறை கொண்ட திவ்யா மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர்களில் ஒருவர். தற்போது கொரோனா இந்தியாவில் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் அதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கான அறிவுரைகள் சிலவற்றை வழங்கி இருக்கிறார்.

அரசு மக்களுக்கு வழங்க வேண்டும் | Govt must takecare of People divyasathyaraj

அதில், ''நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய விட்டமின் சி நிறைந்த பழங்களை உணவில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 1000 mg விட்டமின் சி நமது உடலுக்கு தேவை. ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, புரோக்கலி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.'அல்லது வைட்டமின் சி மாத்திரையை நாளொன்றுக்கு இரண்டு முறை (காலை உணவுக்குப் பின்னர் மற்றும் இரவு உணவுக்குப் பின்னர்) சப்ளிமெண்டாக எடுத்துக் கொள்ளலாம். இந்த மாத்திரையை அரசாங்கமே இலவசமாக வழங்கினால் நல்லது' என்று தெரிவித்து இருக்கிறார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

அரசு மக்களுக்கு வழங்க வேண்டும் | Govt must takecare of People divyasathyaraj

People looking for online information on Corona, Divya Sathyaraj will find this news story useful.