சென்னை: பிரபல 96 புகழ் நடிகை கௌரி கிஷன் விலையுயர்ந்த ஜெர்மனி நாட்டு காரை வாங்கியுள்ளார்.
கேரளா மாநிலம் அடூரை சார்ந்த நடிகை கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 (2018) திரைப்படத்தில் 'ஜானு' (ஜானுவின் இளவயது பெண்) பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த படம் இவருக்கு முதல் அறிமுக படமாகும்.
2019 இல், நடிகை கௌரி கிஷன் மார்கம்களி (2019) மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். 2019 இல், ஹாய் ஹலோ காதல் என்ற குறும்படத்திலும் நடித்தார். பின் தனது தமிழ் அறிமுகமான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு (2020) இல் ஜானுவாக மீண்டும் நடித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் (2021) படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார். மாரிசெல்வராஜ் இயக்கிய கர்ணன் (2021) படத்திலும் கௌரி நடித்துள்ளார். கடைசியாக மகிழினி ஆல்பத்தில் தோன்றி இருந்தார்.
இந்நிலையில் கௌரி கிஷன் தனது முதல் காரை வாங்கியுள்ளார். ஜெர்மனியின் தயாரிப்பான Volkswagen Taigun காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 13.50 லட்சம் முதல் 22 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது.
Taigun ஒரு SUV கார் ஆகும், இந்த கார் 1310 கர்ப் எடை உடனும், 188 கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 385 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றை கொண்டது. 5 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. லிட்டருக்கு 18.47 கி.மீ மைலேஜ் தரவல்லது.
இது 999 cc, 1498 cc என பெட்ரோல் எஞ்சின் வகைகளுடன் விற்கப்படுகிறது. ரோட்டில் 999 சிசி மூலம் இயக்கப்படும் பெட்ரோல் இன்ஜின் காரின் சாலை விலை ₹ 13.29 - 19.74 லட்சம் வரையிலும், 1498 சிசி இஞ்சின் காரின் சாலை விலை ₹ 18.62 - 21.74 லட்சம் வரையிலும் இருக்கும்.