நடிகர் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் மறைவுக்கு பிரபல நடிகர்கள் கவுண்டமணி & செந்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இயக்குனர் டி.பி.கஜேந்திரன், சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை டி.பி.கஜேந்திரன் சென்னை சாலிகிராமம் அருணாசலம் சாலையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 69.
கஜேந்திரன் வீடு மனைவி மக்கள், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா எங்க ஊரு காவல்காரன், பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே, பாண்டிநாட்டு தங்கம் ஆகிய படங்களை இயக்கியவர்.
இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணி, செந்தில், ரமேஷ் கண்ணா, முதல்வர் ஸ்டாலின், வையாபுரி, அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் கஜேந்திரன் உடலுக்கு மலர் மாலை அணிவித்து உருக்கமாக அஞ்சலி செலுத்தினர். மேலும் அவருடைய குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.