தல அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படங்களின் போஸ்டர்கள் உருவான விதம் குறித்து போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின் முதல் 3 போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் போஸ்டர்கள் உருவான விதம் குறித்து போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரத்யேகமாக பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
‘ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தோம், அதை செய்ததாக நம்புகிறேன். ரசிகர்கள் எனன் எதிர்ப்பார்ப்பகளோ அதை அப்படியே கொடுத்துவிட்டால் அவர்களுக்கு போர் அடித்துவிடும். முதல் ட்ரையிலேயே பிகில் போஸ்டர் அமைந்துவிட்டது. 4 விஜய் இருக்கும் போஸ்டர் ஐடியா கொடுத்தது அட்லி தான். சர்கார் படத்தின் போதே ‘பிகில்’ போஸ்டர் பற்றிய ஐடியா கிடைத்துவிட்டது. வயதான கெட்டப்பில் விஜய்யை பார்த்து மொத்த டீமும் மெரண்டு போயிட்டோம். ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த் விஜய், அமைதியாகப் பார்த்துவிட்டு நல்லா இருக்கு நண்பா என்றார்’ என பிரசன்னா கூறினார்.
மேலும், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை போஸ்டர் பற்றி பேசிய அவர், ஃபோடோ ஷூட்டின் போது நான் அங்கு இல்லை. போனில் இயக்குநர் வினோத் கூறியதை வைத்து போஸ்டர் உருவாக்கினேன். முதலில் ஆர்வ கோளாறில் கொஞ்சம் அதிகமாக செய்துவிட்டேன், பின் வினோத் போன் செய்து இவ்ளோ வேண்டாம், கொஞ்சம் குறைச்சிக்கலாம் என்றார். ஃபோட்டோ ஷூட்டில் எடுத்த புகைப்படங்களில் அஜித் சார் மிகவும் கிளாஸாக இருந்தார். போஸ்டரும் அதே போல் அமைந்துவிட்டது. அஜித் சார் போஸ்டரை பார்த்து நல்லா இருக்கு என்றார்’ என கோபி பிரசன்னா தெரிவித்துள்ளார்.