நெஞ்சு வலியில் சரிஞ்ச கோபி.. மூர்த்தி செய்யத் துணிஞ்ச காரியம் .. சோலி முடிஞ்ச்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், தொடர்ச்சியாக பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோரிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார் கோபி.

Gopi plan to stop birthday plan moorthi found him

ரசிகர்கள் பலரும், கோபி சீக்கிரம் சிக்க வேண்டுமென காத்திருக்கவே, மறுபக்கம் தன்னுடைய அசாத்திய  நடிப்பால் அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.

இதனிடையே, தற்போது பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களின் மகா சங்கமம்  நடைபெற்று வருகிறது.

மஹா சங்கமம்..

இதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் மூர்த்தியின் குடும்பத்தினர் அனைவரும் கோபியின் வீட்டில் பிறந்தநாள் ஒன்றிற்காக தங்கி வருகின்றனர். பொதுவாக, கோபி எப்போதும் தனியாக தனது வீட்டில் இருக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர். அவரது அறையில் கூட, எப்போதும் Privacy-யில் இருந்தபடி, ராதிகாவுடன் பேசிக் கொண்டே இருப்பார்.

Gopi plan to stop birthday plan moorthi found him

கோபி போட்ட பிளான்

அப்படி ஒரு சூழலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் அனைவரும் கோபியின் வீட்டில் தங்குவதால், மூர்த்தி மற்றும் அவரது சகோதரரான கதிர் ஆகியோர், கோபியுடன் அவரது அறையில் தூங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், அதிகம் எரிச்சலுக்குள் ஆகிறார் கோபி. மேலும், அந்த பிறந்தநாள் விழாவிற்கு ராதிகாவும் வரவிருப்பதால், வழக்கம் போல அசத்தலான திட்டம் ஒன்றை போடுகிறார் கோபி. பிறந்தநாளை நிறுத்த அவர் போடும் திட்டம், கதிருக்கு தெரிந்து விடுகிறது.

Gopi plan to stop birthday plan moorthi found him

மூர்த்தி செம மாஸ்டர் Mind..

இதற்கு மத்தியில், தனக்கு நெஞ்சு வலி வந்தது போல, இரு குடும்பத்தினர் மத்தியிலும் கோபி நடிக்க தொடங்க, சுற்றி நிற்கும் அனைவரும் சற்று பதற்றம் அடைகின்றனர். ஆனால், மூர்த்தி மற்றும் கதிர் ஆகியோர், கோபியின் நாடகத்தை புரிந்து கொள்கின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் வருவதாகவும் அவர்கள் காத்திருந்து வருகின்றனர்.

அனைத்தும் வீணாகி விட்டதே..

இதனிடையே, முதலுதவி கொடுக்கலாம் என கதிர் கேட்க, உடனடியாக அதற்கான வேலைகளில் இறங்குகிறார் மூர்த்தி. கோபியின் நாடகம் பற்றி அறிந்த மூர்த்தி, வேண்டுமென்றே அவரின் நெஞ்சை வேகமாக அழுத்துகிறார். இதில், கோபி சற்று தடுமாறும் நிலையில், வாய் மீது வாய் வைத்து ஆக்சிஜன் கொடுப்பதாகவும் கூறி, வேகமாக கோபியின் வாயை நோக்கி போகிறார்.

Gopi plan to stop birthday plan moorthi found him

இதனை சற்றும் எதிர்பாராத கோபி, உடனடியாக மூர்த்தியின் வாயை பொத்தி அதிலிருந்து தப்பிக்க பார்க்க, வேறு வழியில்லாமல் எந்திரிக்கவும் செய்து விடுகிறார். நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே என்ற ரேஞ்சிற்கு கோபி இருக்கிறார். இந்த தடவை வசமாக சிக்கிக் கொண்ட கோபி குறித்து, பாக்கியலட்சுமி தொடரின் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Gopi plan to stop birthday plan moorthi found him

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Episode, Baakiyalakshmi Promo, Gopi, Moorthi will find this news story useful.