www.garudavega.com
iTechUS

மலையாள திரை உலகின் முதல் நடிகை.. கூகுள் டூடுல் கொடுத்த கவுரவம்.. EMOTIONAL பிளாஷ்பேக்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அடிக்கடி உலக அளவில் பெரிதாக முத்திரை பதித்த நபர்களின் புகைப்படங்கள் Google டூடுளில் இடம் பெறுவதை நாம் அதிகம் கவனித்துள்ளோம்.

Google Doodle remembers PK Rosy first malayala cinema actress

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஒன்றரை வாரம் என்னை கதறி கதறி அழ வெச்சாங்க".. அசிம் முன் புலம்பிய Housemate!!.. என்ன நடந்துச்சு?

அப்படி ஒரு சூழலில், தற்போது பி.கே. ரோசியின் டூடுலை வெளியீட்டு அவரை கௌரவப்படுத்தியிருக்கிறது கூகுள். பலருக்கும் டூடுளில் ரோசியை பார்த்த பிறகு இவர் யார் என்ற கேள்வி எழலாம்.

1903 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த ரோசிக்கு தற்போது 120 வது பிறந்த நாள் ஆகும். இவர் மலையாளத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த முதல் பெண் என்ற சிறப்பை பெற்றவர் ஆவார். தந்தை இறந்த பின் குடும்பம் வறுமையில் வாடிய சூழலில் சிறு வயதிலேயே கூலி வேலைக்கு செல்லவும் அவர் ஆரம்பித்ததாக தகவல்கள் கூறுகின்றது.

Google Doodle remembers PK Rosy first malayala cinema actress

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் நடிப்பு மற்றும் இசையில் ஆர்வம் இருந்ததால் சிறுவயதில் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பும் ரோசிக்கு கிடைத்திருந்தது. அந்த சமயத்தில் சினிமாவில் நடிக்க பெண்கள் தயக்கம் காட்டிய சூழலில், முன்பு இருந்த தடைகளை எல்லாம் உடைத்து ஜே.சி. டேனியல் இயக்கி இருந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் ரோசி. 1928 ஆம் ஆண்டு விகதகுமாரன் என்ற முதல் மலையாள திரைப்படம் ரோசி நடிப்பில் வெளியாகி இருந்தது. சைலன்ட் படமான இதில், ஒரு பெண் நடித்திருந்த சூழலில் இது தொடர்பாக பெரிய அளவில் அந்த சமயத்தில் சில பிரச்சனைகளும் வெடித்ததாக சொல்லப்படுகிறது.

Google Doodle remembers PK Rosy first malayala cinema actress

Images are subject to © copyright to their respective owners.

இதன் பின்னர் ட்ரக் டிரைவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ராஜம்மாள் என்கிற பெயரில் தமிழ்நாட்டில் குடியேறி விட்டார் பி.கே. ரோசி. மலையாள சினிமாவின் முதல் பெண் கதாநாயகி என்ற பெருமையுடன் விளங்கிய ரோசி மறைந்த சூழலில், அவரது 120 ஆவது பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 10), கூகுள் டூடுளில் பி.கே. ரோசி புகைப்படம் இடம்பெற செய்து அவரை கவுரப்படுத்தி உள்ளது.

Also Read | பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே அசிம்க்கு வந்த மிரட்டல் 😅.. "அட யாருப்பா அந்த ஹவுஸ்மேட்டு?"

மற்ற செய்திகள்

Google Doodle remembers PK Rosy first malayala cinema actress

People looking for online information on First malayala cinema actress PK Rosy, Google Doodle, Google Doodle remembers PK Rosy, PK Rosy will find this news story useful.