நடிகர் டேனியல் பாலாஜி, நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் 'காட்மேன்' என்ற பெயரில் வெப் சீரிஸ் ஜீ5 (Zee5) தளத்தில் வெளியாகியிருந்தது. இந்த சீரிஸின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த வெப் சீரிஸிற்கு குறிப்பிட்ட சமூகத்தினரையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து ஜீ5 தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ''ஜி5 தளம் வழிமுறைகளை முறையாக கடைபிடித்துவருகிறது. மேலும் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, 'காட்மேன்' வெப் சீரிஸின் ரீலிஸை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம். இந்த வெப் சீரிஸின் தயாரிப்பாளர், இந்த வெப் சீரிஸ் மற்றும் ஜீ5 ஆகியவை எந்தவொரு மதத்திற்கும், சமூகத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல' என்று விளக்கமளித்துள்ளது.
Purely in the interest of its viewers, ZEE5 was also one of the first industry players to have signed the Code for Self-Regulation of Online Curated Content Providers. (2/3)
— ZEE5 Tamil (@ZEE5Tamil) June 1, 2020