சென்னையின் பிரபல திரையரங்கான உதயம் தியேட்டர் நிறுவனமும், ஜி.கே.சினிமாஸ் நிறுவனமும் தற்போது திருமண பந்தத்தால் இணையவிருக்கிறது.
சென்னை அசோக் பில்லர் அருகேயுள்ள உதயம் தியேட்டர் நிறுவனர் நாராயணனின் மகள் கீதாவிற்கும், போரூர் அருகேயுள்ள ஜி.கே.சினிமாஸ் நிறுவனர் மதிவாணனின் மகனும், ஜி.கே.சினிமாஸின் எம்.டி-யுமான ரூபன் மதிவாணனுக்கும் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.
ரூபன் மதிவாணன் மற்றும் கீதா ஆகியோரின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெறுகிறது. இன்று (ஜூன்.12) மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், நாளை (ஜூன்.13) திருமண முகூர்த்தமும் நடைபெறுகிறது
இத்திருமண விழா சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மாள் ஹாலில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.