முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்கிற விவாதத்துக்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில், இன்னொரு பக்கம் முட்டை சைவமா? அசைவமா? என்கிற விவாதமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனிடையே முந்தைய தலைமுறையை விடவும் இந்த தலைமுறை இளைஞர்கள் உயிர் கொல்லாமை, ஜீவகாருண்யம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக தாவர உணவுகள் , தாவர இறைச்சி, காய்கறி டயட் உள்ளிட்ட உணவு முறைகளுக்கு மாறி வருவதுடன் அவை குறித்து விழிப்புணர்வையும் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவிலும் இந்த வகை உணவுப் பழக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், நடிகை ஜெனிலியா தம்முடைய மகனுடன் இணைந்து வெஜிடபிள் ஆம்லெட் போட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். ஒருபுறம் இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்படும் நிலையில் நடிகை ஜெனிலியா தம்முடைய வலைப்பகத்தில், மகனுடன் வெஜ் ஆம்லெட் போடும் ஃபோட்டோவை பகிர்ந்து, “தாவர உணவில் ஆம்லெட் போட முடியாதுனு யாரோ சொன்னாங்க..? வெற்றி கிடைக்கும் வரை முயற்சி பண்ணிட்டே இருங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஜெனிலியாவும், அவருடைய கணவர் நடிகர் ரித்தேஷும், வேகன் உணவு குறித்த விழிப்புணர்வை பல்வேறு நிலைகளிலும் படுத்தி ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.