www.garudavega.com

"தனுஷ் சொன்ன மாதிரி நாங்க SOUP BOYS .. அவ கூட LIFE ஃபுல்லா..".. GVM LOVE ஷேரிங்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கெளதம் வாசுதேவ் மேனன். மாதவன், அப்பாஸ், ரீமாசென் உள்ளிட்டோர் நடித்த 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

gautham vasudev menon about his love journey exclusive

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் உள்ளிட்ட கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான பல திரைப்படங்கள் இன்றளவிலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கூடியவை.

GVM படங்கள் என்று வந்து விட்டாலே, அதில் வரும் காதல் காட்சிகள் பெயர் போனவை. அதே போல, அவரது படத்தில் வரும் பாடல்கள் கூட பலரின் பிளேலிஸ்ட்டை ஆக்கிரமிக்க கூடியவை. மிகவும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் காதல் காட்சிகளை இயக்குவதில் பெயர் போன கெளதம் வாசுதேவ் மேனன், போலீஸ் கதாபாத்திரங்களை மையப்படுத்தியும் திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

இதனிடையே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கெளதம். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும் வரும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. முற்றிலும் கெளதம் ஸ்டைலில் இல்லாமல், மாறுபட்ட வகையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ராதிகா, சிதி இட்னானி, நீரஜ் மாதவ், அப்புக்குட்டி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் ஐம்பது நாட்களை கடந்து பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் Behindwoods சேனலுக்கு தனது ஜீப்பில் பயணம் செய்தபடி பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது கல்லூரி காதலை நினைவலைகளை பகிர்ந்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், "தனுஷ் சொன்ன மாதிரி இந்த சூப் பாய்ஸ் Categoryல தான் நாங்க எல்லாம் வருவோம்னு நினைக்கிறேன். ஒரு பொண்ணை புடிக்கும். அவங்க கூடயே 2 வருஷம் இருந்துட்டு அவங்க கையை கூட பிடிக்காம தான் லவ். இந்த பீலிங் எல்லாம் இருந்தது. அவ கூட வாழ்க்கை பூரா இருக்கணும்னு தோணும்.

ஆனா அவங்களுக்கு அது தோணல. ஒரு பாயிண்ட்டுக்கு மேல அவங்க வந்து, 'நீ என் கைய கூட புடிக்கல' அப்படிங்குற மாதிரி ஒன்னு சொன்னாங்க. அதுல ரொம்ப ஒரு மாதிரி பாதிப்படைஞ்சேன்னு சொல்லணும். அதுக்கப்புறம் மீட் பண்ண ஒரு பொண்ணு, அவங்களோட ஒரு நாலஞ்சு வருஷம் இருந்தேன். இந்த கைய கூட புடிக்கலைன்னு அவங்க சொல்லக்கூடாதுன்னு அதுக்கான முயற்சி எடுத்தேன்.

ஆனா, அதே நேரத்துல நீங்க யார் கூட பூரா வாழ்க்கை வாழ போறீங்களோ, அவங்க நமக்கு தெரியாம நம்ம பக்கத்துல இருப்பாங்க அப்படின்னு  ஒரு விஷயம் எனக்கு ஒரு பாய்ண்ட்டில் பட்டது. அதுக்கப்புறம் அவங்க கூட லைஃப்ல செட்டில் ஆயிட்டேன்னு தான் சொல்லணும்" என கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்.

"தனுஷ் சொன்ன மாதிரி நாங்க SOUP BOYS .. அவ கூட LIFE ஃபுல்லா..".. GVM LOVE ஷேரிங்ஸ்!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Gautham vasudev menon about his love journey exclusive

People looking for online information on Dhanush, Gautham Vasudev Menon, GVM, Love, Soup Boys will find this news story useful.