தமிழில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே.
மாதவன், ரீமா சென் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் வந்த வசீகரா தொடங்கி அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட் ஆகின. நடிகர் மாதவனுக்கும், அப்பட இயக்குநர் கவுதம் மேனனுக்கும் தமிழில் இது முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
இந்த படம் தமிழில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் மாதவனே நாயகனாக நடிக்க, கவுதம் மேனனே இயக்கினார். அப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாகவும் அறிமுக நாயகியாகவும் நடித்தவர் தியா மிர்சா. நடிகை தியா மிர்சாவுக்கு தான் தற்போது 2வது திருமணம் நடந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சாஹில் சங்கா என்பவரை திருமணம் செய்துகொண்ட பின்னர்,இருவரும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் தான் சுமார் 39 வயதாகும் நடிகை தியா தொழிலதிபர் ஒருவரை தற்போது 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் வைபவ் என்பவரை தியா மிர்சா காதல் செய்ததை அடுத்து, இவர்களது திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் நடந்துள்ளது. இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருவதுடன் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தியா மிர்சா, “காதல் என்பது குடும்பம் என்கிற முழுமையான வட்டம். அது கதவைத் தட்டுவது நமக்கு கேட்பது என்பதும், கதவைத் திறந்து அதைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு அதிசயம்.
Love is a full-circle that we call home. And what a miracle it is to hear its knock, open the door and be found by it. May all puzzles find their missing pieces, may all hearts heal and may the miracle of love continue to unfold all around us ❤️🙏🏻 pic.twitter.com/4a19ffyz48
— Dia Mirza (@deespeak) February 16, 2021
எல்லா புதிர்களும் கண்டுபிடிக்கப்படட்டும். எல்லா இதயங்களின் ரணங்களும் ஆறட்டும். அன்பின் அதிசயம் நம்மை தொடரட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.