கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது.
இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை ப்ரியா பவானி சங்கர் பிஹைண்ட்வுஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் பத்து தல படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் சேர்ந்துதான் இந்த பேட்டியினை அளித்தனர். இதில் திருமணத்திற்கு பிறகான தன்னுடைய வாழ்க்கை குறித்து நடிகர் கௌதம் கார்த்திக் பேசும் பொழுது, “இதற்கு முன்பாக ஆண்கள் ரெகுலர் ஆண்கள் போல ஃபோகஸ் இல்லாமல் இருந்தேன். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என்னை விட அவர் (மஞ்சிமா மோகன்) கவனமாக இருக்கிறார். எனக்காக நிறைய விட்டுக் கொடுத்து நான் இன்னும் டாப்பில் வருவதற்கு நிறைய விஷயங்களை செய்கிறார். திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை அமேசிங்காக மாறி இருக்கிறது” என்று கூறினார்.
இப்படி கௌதம் கார்த்திக் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடைமறித்த நடிகை பிரியா பவானி சங்கர், “கௌதம் கார்த்திக் திருமணத்துக்கு பிறகு அதிக ஹேண்ட்ஸம் ஆகிவிட்டார். அடுத்த 50 வருடங்களுக்கு இந்த தம்பதிக்கு ஹனிமூன்தான். மனதை வென்ற ஜோடி இவர்கள், இவர்களை பிடிக்காதவர்கள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.