இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார், 2015 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இசையமைப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கார்த்தியின் 'சர்தார்', சூர்யாவின் 'வாடிவாசல்', தனுஷின் 43வது படம் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்து ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன் போன்ற படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.
இந்நிலையில் ஜி.வி. பிராகாஷ்குமார் தனது அடுத்தபடம் பற்றிய தகவலை டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். அதில் முதல்முறையாக தேசிய விருதுப்பெற்ற தென் மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைகிறார். இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் தயாரிக்கிறார். என். ஆர் ரகுநந்தன் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் வகைமையில் (Genre) இந்தப்படம் உருவாகிறது.
Super happy to be joining hands with @seenuramasamy sir for this action thriller produced by @Kalaimagan20 #SkyManFilmsPN2 .. super excited about this script @kalaimagan20 @SkymanFilms @NRRaghunanthan @seenuramasamy @gvprakash @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/8yxPpK8Tj1
— G.V.Prakash Kumar (@gvprakash) July 21, 2021
படத்தில் பணிபுரியும் மற்ற படக்குழுவினர் விபரங்கள் இனி வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.