சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதை முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சுதா கொங்கராவின் அடுத்த படம்…’Title இருந்தா சொல்லுங்க”… அக்ஷய் குமார் பகிர்ந்த தெறி வீடியோ!
இந்திக்கு போன சூரரைப் போற்று…
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளில் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் வெற்றியை அடுத்து அந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். கதாநாயகியாக ராதிகாமடன் நடிக்கிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதை நடிகர் அக்ஷய்குமார் சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
டைட்டில் சொல்லுங்கப்பா…
இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் சுதா கொங்கரா, அக்ஷய் குமார் மற்றும் ராதிகா ஆகியோர் இருக்க, ராதிகா தேங்காய் உடைத்து ஷூட்டிங்கை தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த வீடியோவோடு “தேங்காய் உடைக்கும் நிகழ்வோடு, எங்கள் இதய பிராத்தனைகளையும் கொண்டு இன்னும் பெயரிடப்படாத படத்தைத் தொடங்குகிறோம். உங்கள் மனதில் ஏதாவது டைட்டில் இருந்தால் பகிருங்கள். உங்களின் வாழ்த்துகள் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் யார்?
படம் பற்றி வெளியான போஸ்டரில் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் தன்னுடைய சமூகவலைதளத்தில் ‘இந்த கிளாசிக் படத்தின் இந்தி வெர்ஷனுக்கு இசையமைப்பது மகிழ்ச்சி. புதிய பாடல்கள். புதிய பின்னணி இசை. எனது சிறந்த காம்பினேஷனான சுதா கொங்கரா உடனான கூட்டணி மீண்டும்… அக்ஷய் குமார் நடிப்பில் சூர்யா தயாரிக்கும் இந்தி படத்தின் மூலம் இணைகிறோம். இந்த படத்தின் சூப்பரான பாடல் ஒன்று உருவாகிக் கொண்டு இருக்கிறது.” என்று அறிவித்து, இந்த படத்துக்கு இசையமைப்பதை உறுதி செய்துள்ளார். இந்த தகவல் தமிழ் ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழில் ஜி வி பிரகாஷ் இசையில் சூரரைப் போற்று படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8