ஐங்கரன் திரைப்படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருநாள் தாமதமாக இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
Also Read | “நிச்சயதார்த்தம் simple-ஆ… ஆனா கல்யாணத்துக்கு”… நடிகர் விக்னேஷ்காந்த் வெளியிட்ட viral pics!
ரிலீஸ் தாமதம்…
ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க, ஐங்கரன் எனும் திரைப்படத்தை ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு தமது 2வது படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் மகிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார். 2017-ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தை காமன்மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீடு கொரோனாவுக்கு முன்பிருந்தே பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.
புது ரிலீஸ் தேதி…
இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவந்தன. மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்த படம் குறித்து படத்தின் கதாநாயகன் ஜி வி பிரகாஷ்குமார் “பல தடைகளை கடந்து…. ஐங்கரன் படத்தின் ரிலீஸ் தேதி எனது நண்பர் தனுஷ் அறிவிக்க உள்ளார்” என கூறியிருந்தார்.இந்நிலையில் தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை மே 12 என தனுஷ் அறிவித்தார். ஆனால் அறிவித்தபடி மே 12 ஆம் தேதியும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து இன்று, ஒரு நாள் (மே 13) தாமதமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இதை ஜி வி பிரகாஷ் குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஒரு நாள் தாமதம்…
அவருடையப் பதிவில் “ஐங்கரன் திரைப்படம் இப்போது திரையரங்குகளில். கேடிஎம் கொடுக்கப்பட்டு விட்டது. நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து பார்க்கலாம்.” எனக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தும், விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கும், தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவைப் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தரன் “ சமீபகாலமாக ஜி வி பிரகாஷ் போல எந்த ஒரு நடிகரையும் நான் பார்த்ததில்லை. படத்துக்காக தனக்கு பேசப்பட்ட சம்பளம் கிடைக்காமலும், தன் சொந்த பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்தும் ரிலீஸுக்காக உழைத்திருக்கிறார். என் இனிய சகோதரரே (ஜி வி பிரகாஷ்) கண்டிப்பாக இந்த படத்தை மக்கள் ரசித்துக் கொண்டாடுவார்கள்” என்று நம்பிக்கையாகக் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8