இந்தியா ஒரு கலாச்சார வளம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகிய இரண்டிலும் மாநில அளவிலான பிராந்திய உள்ளடக்கம் உள்ளது, பல நடிகர், நடிகைகள் மொழியின் எல்லைகளைக் கடந்து புதிய பிரதேசங்களுக்குள் நுழைந்துள்ளனர். பல நடிகர், நடிகைகள் பல்வேறு மொழிகளில் பணிபுரிவதால் இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளனர்.
அதில் தற்போது இந்திய அளவில் கோலோச்சும் 4 நடிகைகளைப் பார்ப்போம்.

1. சமந்தா ரூத் பிரபு: ஏற்கனவே தெற்கே ஒரு நடிகையாக இருக்கும் சமந்தா பேமிலி மேன் சீசன் -2 வில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரில் ஒரு போராளியாக மிகச்சிறந்த நடிப்பு மூலம் இந்திய அளவில் ரசிகர்களை திகைக்க வைத்தார். இதற்கடுத்து தெலுங்கு மொழியில் உருவாகும் "சகுந்தலம்" என்ற அவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

2. நித்தி அகர்வால்: சமீபத்தில் சோனு சூட் உடன் நடித்த "சாத் க்யா நிபாகோ" என்ற மியூசிக் வீடியோ மூலம் வெறித்தனமாக இணையத்தை கலக்கிய நித்தி அகர்வால், பவன் கல்யாண் நடிப்பில் விரைவில் பல மொழிகளில் வெளியாக உள்ள படமான ஹரி ஹர வீர மல்லுவில் நடிக்கிறார். அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் ராம்பால் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

3. பூஜா ஹெக்டே: பூஜா ஹெக்டே, பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் பொங்கலுக்கு வரவிருக்கும் காதல் படமான "ராதே ஷாம்" படத்தை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார். மேலும் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

4. ஸ்ருதி ஹாசன்: ஸ்ருதி ஹாசன், சலாரில் பிரபாஸுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள உள்ளார். இருமொழிகளில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார்.