தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து வியந்ததாக பிரபல முன்னாள் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் நேற்று (அக்.12ம்) தேதி மாலை 6 மணிக்கு ரிலீசானது. பிகில் படத்தில் விஜய்யின் வித்தியாசமான லுக், மாஸ் கிளப்பும் அவரது வசனங்கள், ஸ்டைல் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில், ‘பிகில்’ டீசரை பார்த்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் அர்னால்டு ட்விட்டரில் தனது கருத்தை உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டில், ‘பிகிலே....! டேய் மாமா ஸ்ரீனி தளபதி விஜய் மற்றும் தமிழ் சினிமாவை எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி. பிகில் டிரைலர் மொத்தமாக பிடிச்சிருக்கு. ராயப்பன் கேரக்டர் அந்தர் மாஸ். யாராச்சும் 2 டிக்கெட் ஏற்பாடு பண்ணிக் குடுங்க நண்பா!’ என அர்ச்சனா கல்பாத்தியை டேக் செய்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு போட்றா வெடிய என வெறித்தனம் கூட்டும் விதமாக வெளியாகவிருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
BIGILAAAAAEEE!! Dei Mama @srinimaama16, thanks for introducing me to #ThalapathyVijay @actorvijay & Tamil movies. Totally loved the #BigilTrailer. Raayappan character is andhar mass. Somebody get me 2 tickets Nanba! @archanakalpathihttps://t.co/Ooz7yC8uQL pic.twitter.com/nmI51I9ldo
— Russel Arnold (@RusselArnold69) October 13, 2019