பிக்பாஸ் 5வது சீசன் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. வீட்டில் 18 போட்டியாளர்களும் ஒரு வழியாக செட் ஆகி விட்டனர். ஆனால் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் டாஸ்குகளில் ஈடுபடும்போது தான் இன்னும் தங்களுடைய முழு உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அதற்கான தருணம் தொடங்கிவிட்டது.
ஆம், முதல் முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மாஸ்டர் பட நடிகர் சிபியை பிக்பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து ஒரு டாஸ்க்கை கொடுத்திருக்கிறார்.
அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அனைவரும் அவரவர் கதையை அனைவர் முன்னிலும் சொல்ல வேண்டும். அவர்களுக்கு லைக், டிஸ்லைக் மற்றும் லவ் உள்ளிட்ட எமோஜிகளை மற்ற ஹவுஸ்மேட்ஸ் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் பலரும் கதை சொல்லத் தொடங்கிவிட்டனர். இசைவாணி தன்னுடைய கதையை சொல்லி இருந்தார். அவருக்கு ஜீரோ டிஸ்லைக்ஸ் கிடைத்தன. இதேபோல் சின்னப்பொண்ணு தன்னுடைய கதையை சொல்லி இருந்தார். அவருக்கு ராஜூ டிஸ்லைக் செய்துவிட்டார்.
இதேபோல் இமான் அண்ணாச்சி தற்போது தன்னுடைய கதையை சொல்கிறார். இமான் அண்ணாச்சி சொல்லி முடித்தவுடன் அந்தக் கதையின் முடிவில் ஒரு காமெடியனாக, தான் பிக்பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என்கிற தன்னுடைய ஆசையையும் கூறுகிறார்.
அவரை டிஸ்லைக் செய்த நதியா ‘காரணம்லாம் சொல்ல வேண்டியதில்லை’ என கூற, இன்னொருபுறம் மாஸ்டர் சிபியும் சிரிப்பு வந்தால் சிரிக்கலாம் என கூறுகிறார் அவருடன் நிரூப் பேச்சுவார்த்தை செய்து தன் கருத்தை புரியவைக்க முயற்சிக்கிறார்.
தொடர்ச்சியாக அனைவரும் அங்கங்கே நின்று பேசிக் கொள்கின்றனர். அப்போது நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பிக்க போகுது என்று கூறுகிறார். இப்படி பரபரப்பாக பிக்பாஸ் வீட்டு விஷயங்கள் காரசாரமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசன் மற்ற சீசன்களைப் போல் அல்லாமல் ஆடியன்ஸின் முன்னிலையில் நடக்கிறது. தினமும் இரவு விஜய் டிவியில் 10 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.
நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம் அனைவரையும் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் இந்த போட்டியாளர்கள் தங்களுடைய வேலைகளையும் பிரித்துக் கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் பாத்ரூம், பாத்திரம் கழுவுதல், ஹவுஸ் க்ளீனிங், சமையல் ஆகிய நான்கு முக்கிய விஷயங்களுக்கு நான்கு கேப்டன்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த கேப்டன்கள் தங்கள் அணிக்கு தேவையான ஹவுஸ்மேட்ஸையும் தேர்வு செய்திருக்கின்றனர். இந்த நிலைமையில் பிக்பாஸ் வீட்டில், ‘கதை சொல்லட்டுமா’ டாஸ்க் போய்க்கொண்டிருக்கிறது.
இதனிடையே அனைவரின் முன்னிலையும் அமர்ந்து, ஒவ்வொருவர் கேரக்டர் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த அபிஷேக், திடீரென தன்னுடைய அம்மாவை நினைத்து அழத் தொடங்கிய சம்பவமும் பிக்பாஸ் வீட்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.