ஒலிம்பிக்ஸ் வாள் சண்டைப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்தியராகியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பவானி என்பவர்.
இவருக்கு இயக்குநர் சசிகுமார் தமது வாழ்த்துக்களை சசிகுமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி சசிகுமார் தமது ட்வீட்டில், “ஒலிம்பிக்கில் வாள் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பவானி தேவிக்கு எனது வாழ்த்துகள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் வாள் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பவானி தேவிக்கு எனது வாழ்த்துகள் 👍
Feel #Proud n #Happy @IamBhavaniDevi 🎉🎉👍🎖#TokyoOlympics 🤺 https://t.co/N2kyvNqzWn
— M.Sasikumar (@SasikumarDir) March 16, 2021
இதற்கு பவானி தேவி தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
Thank you very much sir!🙏😊 https://t.co/FyAHDDl4A7
— C A Bhavani Devi (@IamBhavaniDevi) March 16, 2021
முன்னதாக இதுபற்றி கத்துக்குட்டி திரைப்படத்தின் இயக்குநர் சரவணன், “6 வருடங்களுக்கு முன்னாள், இத்தாலியில் நடந்த வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்வதற்கான வசதியின்றி தவித்து வந்த பவானிதேவிக்கு இயக்குநரும் நடிகருமான சசிகுமார் 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார்.
6வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி பவானிதேவி தடுமாறினார். 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார் @SasikumarDir
ஒரு ஆட்டோவில் தன் தாயுடன் வந்து நன்றி சொன்ன பவானி, இன்று ஒலிம்பிக்கில்! போராடத் துணிந்தவர்களை ஏழ்மையால் தடுக்க முடியாது, சாட்சி பவானி! pic.twitter.com/tvYWzapV2c
— இரா.சரவணன் (@erasaravanan) March 15, 2021
அப்போது ஒரு ஆட்டோவில் தன் தாயுடன் வந்து நன்றி சொன்ன பவானி, இன்று ஒலிம்பிக்கில்.. போராடத் துணிந்தவர்களை ஏழ்மையால் தடுக்க முடியாது, அதற்கு சாட்சி பவானி” என்று குறிப்பிட்டுள்ளார்.