உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இதனால் சினிமா துறையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இல்லாமல், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இத்துறை சார்ந்த பலரும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் இறுதி கட்ட வேலைகளான எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், டப்பிங் போன்ற வேலைகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் வெளியாகியிருக்கும் புகைப்படம் ஒன்று மிகுந்த அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.கொரோனாவால் வெளிநாடுகள் மிகுந்த உயிர் சேதத்தை சந்தித்துள்ளன. உயிரிழப்பு லட்சக் கணக்கில் எகிறி கொண்டு இருக்கும் இந்த வேளையில் உருகுவே நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிப்புற ஷூட்டிங்கிற்க்கு இன்னும் அனுமதி தராத நிலையில், Indoor ஷூட்டிங் ஆரம்பமானதாக தெரிகிறது . முககவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடை அணிந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் தமிழ்நாட்டிலும் இதே நிலைமை சீக்கிரம் வரலாம் என்று கூறி வருகின்றனர்.