இந்தியாவிலும் தமிழகத்திலும் பெருகிவரும் கொரோனா பரவல் காரணமாக மே 31-ஆம் தேதி வரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களின் மருத்துவம், கொரோனா சிகிச்சை, ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு கவனித்து வருகிறது.
இதனிடையே முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்துவருகின்றனர். அவ்வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்திக் உள்ளிட்டோர் 1 கோடி ரூபாயும், நடிகர் அஜித் 25 லட்ச ரூபாயும் அளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் 10 லட்ச ரூபாயும், இயக்குநர் ஷங்கர் 10 லட்சம் ரூபாயும், எடிட்டர் மோகன் - இயக்குநர் மோகன் ராஜா - நடிகர் ஜெயம் ரவி மூவரும் தங்கள் சார்பாக 10 லட்சம் ரூபாயும், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாயும் நிதி அளித்துள்ளனர்.
இதேபோல் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு நடிகர் அஜித் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் (இயக்குநர்) ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
ALSO READ: அதிர்ச்சி..!!.. ரஜினிமுருகன் பட புகழ் நடிகரும் கோ டைரக்டருமான பவுன்ராஜ் திடீர் மரணம்!