நேற்றைய தினம் பிக்பாஸில் பாலாஜி மாறி மாறி பேசியது ரசிகர்களை குழப்பிய நிலையில், அவர் பக்கம் ஒருவர் கூட நிற்காதது அவருக்கு மிகவும் வருத்தம் அளித்தது. அடுத்து ஷிவானி அவருக்கு ஊட்டி விடுவதும் இருவரும் கண்களாலேயே ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை காண முடிந்தது. இந்நிலையில் மற்ற போட்டியாளர்கள் விளையாடிக்கொண்டிருக்க, இவர்கள் இருவர் மட்டும் வேறு உலகத்தில் ஏதோ ஒன்று பற்றி பேசிக் கொண்டிருக்கும் புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பாலாஜி ஏற்கனவே "இது காதல் எல்லாம் இல்லை. ஒரு ஸ்டேட்டர்ஜி" என்று சுசித்ராவிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.