நேற்று கால அட்டவணை டாஸ்க் நடுவில் போட்டியாளர்கள் படுத்து தூங்கி விடக்கூடாது என நினைத்த பிக்பாஸ் அதற்காக சிலபல கட்டளைகளை அள்ளித்தெளித்து வந்தார். முதலில் அவர் கொடுத்த ஜிப்ரீஷ் டாஸ்க் அவருக்கே பிடிக்கவில்லை போல. அதை நிறுத்திவிட்டு மறுபடியும் ஒரு சூப்பர் ஐடியாவுடன் வந்தார். அதன்படி கருப்பு-வெள்ளை படங்கள் காட்சியை போட்டியாளர்கள் நடித்து காண்பிக்க வேண்டும்.
நிஷா பராசக்தி வசனத்தை தன்னுடைய பாணியில் சொல்லி லேசாக கைதட்ட வைத்தார். ஆனால் அடுத்து வந்த அனிதா, ஆரியுடன் இணைந்து எம்.ஆர்.ராதா ஸ்டைலில் செம மாஸ் பெர்பார்ம் ஒன்றை செய்து காண்பித்தார். இதுநாள்வரை அனிதாவை பிடிக்காதவர்கள் கூட அவரின் பெர்பார்மன்ஸ் பார்த்து வியந்து போய்விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அப்படி நீண்ட ஒரு வசனத்தை கையில் சிகரெட்டுடன் செய்து அப்லாஸ் அள்ளினார்.
Today show nala pochu 🤩✌🏻
Especially #anitha rocked today 🙌🏻
Ithula irunthu ena therithu??
Physical task kuduthu active uh ve vachurkanum 😂#BiggBossTamil4 #BiggBossTamil
— ❤️Jan❤️ (@janicesalintha) November 17, 2020
இதைப்பார்த்த ரசிகர்கள் உங்ககிட்ட இதைத்தான் இத்தனை நாளா எதிர்பார்த்தோம். செமயா கலக்கிட்டீங்க என சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். மேலும் இதுபோன்ற டாஸ்க்குகளை அளியுங்கள் பிக்பாஸ் என சைடு கேப்பில் அவருக்கும் இலவச ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். வேறு சில ரசிகர்களோ இதுபோன்ற செயல்களில் உங்கள் திறமைகளை காட்டுங்கள் அனிதா என தெரிவித்து வருகின்றனர்.