நேற்று பிக்பாஸ் வீட்டில் பாலாஜி கொளுத்திப்போட்ட வெடி கொளுந்து விட்டு எரிந்தது. சக போட்டியாளர்களும் தங்களது பங்குக்கு அதில் மேலும் எண்ணெய் ஊற்றி அழகு பார்த்தனர். நள்ளிரவில் ஆரி, அனிதா, சனம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த பாலாஜி கேப்டன் டாஸ்க் பற்றி பேசினார். ஆரியும் அவரிடம் சகஜமாக பேச, மறுநாள் பாலாஜி அதை அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டார்.
அவ்வளவு தான் அனிதா, சனம் உள்ளிட்டோர் கூட ஆரிக்கு எதிராக திரும்பிக் கொண்டனர். இதனால் வீடே போர்க்களமாக மாறியது. இடையில் இருவரும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு இது செல்ல ஷிவானி ஓடிச்சென்று ரியோவை அழைத்து வந்தார். அதற்குள் சண்டை முடிந்து விட்டது. பின்னர் பாலாஜி, ஆரியின் காலை தொட்டது போல மன்னிப்பு கேட்டார். எனினும் பிரச்சினை இத்துடன் முடியாது என தெரிகிறது.
ஆரி விட்டு கொடுத்தேனு எங்கேயும் சொல்லல,ரியோ கஷ்டப்படுறது பார்த்துட்டு வேணும்னே தான் வேகமா ஓடினேன் சொன்னாரு.ஆரி விட்டு கொடுத்து தான் நீங்க கேப்டன் ஆனீங்கலாம்னு ரியோ கிட்ட சொல்ரான். என்ன ஒரு வில்லத்தனம்.#Aari #Aariarjunan #Balaji #BalajiMurugaDass #BiggBoss4Tamil #BiggBossTamil4
— நல்லதை பகிர்வோம் (@pakirvom) November 23, 2020
இதைப்பார்த்த ரசிகர்கள் ஆரி அப்படியே சொல்லி இருந்தாலும் அதை எப்படி எல்லார் முன்னாடி சொல்லி அவரை மாட்டி விடலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலாஜிக்கு இது ஒன்றும் புதிது இல்லை. ஏனெனில் முன்பொரு முறை அர்ச்சனா எலுமிச்சை தரவில்லை என, சனம் பாலாஜியிடம் சொன்னதை அர்ச்சனாவிடம் பாலாஜி போட்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.