தெருக்களில் சுற்றித் திரிந்து நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்த ஒரு இசைக் கலைஞரை சமூக வலைதளத்தில் பார்த்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவரை பார்த்தால் தகவல் தரச் சொல்லி கேட்டிருந்தார்.
இந்த கொரோனா சூழலில் சாதாரண மக்களே பிழைப்புக்கு அன்றாடம் சிரமப்படும் பொழுது தன்னுடைய பூம்பூம் மாட்டுடன் தன் நாதஸ்வரத்தை வாசித்து சுற்றிவந்த இவருடைய வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதைப்பார்த்த ஜிவி பிரகாஷ் நோட்ஸ்களில் துல்லியமாக வாசிக்கும் இவரை கண்டுபிடித்து சொல்லுங்கள் ..இவரை வைத்து ஒரு ரெக்கார்டிங் செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து ரசிகர்கள் ஜிவி பிரகாஷ் குமாரை பாராட்டி வந்தனர். இந்தநலையில் தான் ரசிகர் ஒருவர் குறிப்பிட்ட அந்த கலைஞரை வீடியோ எடுத்து பெயர் மற்றும் போன் நம்பருடன் ட்விட்டரில் பதிவிட்டு ஜிவி பிரகாஷை டேக் செய்திருக்கிறார். இதை பார்த்த ஜிவி பிரகாஷ், “மிகவும் நன்றி.. எங்கள் குழு அவரை தொடர்பு கொண்டு, மிக விரைவில் அவரை வைத்து ரெக்கார்டிங் செய்வோம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
Super . Thanks a ton . Will get my people to talk with him tomm . Hoping to record soon in the coming months with him .
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2021
இதற்கு ரசிகர்கள் பலரும் ஜிவி பிரகாஷை குறிப்பிட்டு இப்படியான கலைஞர்களை ஆதரிப்பதற்கு மேலும் நன்றியை தெரிவித்து வருகின்றனர். அந்த க்லைஞரின் பெயர் நாராயணன். இப்போது பெங்களூருவில் இருக்கும் அவர் கொரோனா குறைந்த பின்னர் சென்னை வந்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் படத்திற்காக வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ALSO READ: "வைரல் ஆகும் யே ராசா!".. யுவனின் மனதை வருடும் குரலில் மாமனிதன் படத்தின் அடுத்த சிங்கிள்!