தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷூடன் இணைந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தான் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லரை இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் Suruli The OG!!என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். அத்துடன் தனுஷூம் இந்த ட்ரெய்லரை பகிர்ந்து ட்வீட் பதிவிட்டுள்ள்ளார்.
இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் கார்த்திக் சுப்புராஜின் ட்வீட் இணைப்பில் சென்று OG என்றால் என்ன? என கேட்டுள்ளனர்.
OG na enna thala
— Sab (@51balaji) June 1, 2021
Og na ena nae?
— Gautham Dhananjayan💙 (@gauthamFrancis) June 1, 2021
OG ?
— 𝗛𝗲𝗶𝘀𝗲𝗻𝗯𝗲𝗿𝗴 💥🤙🏼 (@itz_vampiree) June 1, 2021
OG 👀👀
— Film Critic/Tracker Wear Mask Stay safe 😷 (@MasterVinay22) June 1, 2021
இதற்கு பதில் அளித்த ரசிகர்கள் சிலர், OG என்றால் ஒரிஜினல் கேங்ஸ்டர் என்று அர்த்தம் என்றும் எனவே தான் கார்த்திக் சுப்புராஜ் Suruli The OG!! என குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
#suruli the original gangster💥😊❤️ @dhanushkraja Thalaivaa..
— kettavan Yasin❤️D veriyan (@Yasin06908194) June 1, 2021
Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வரும் ஜூன் 18 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.