ரசிகர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். பொதுவாகவே பிடித்த நடிகர் நடிகைகளின் படம் வந்தால் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது உண்டு.
ஆனால் சில ரசிகர்கள் மட்டும் தான் ஒருபடி மேலே போய் நம்ப முடியாத வகையிலான செயல்களை செய்வதையும் காண முடியும். அப்படித்தான் சில ரசிகர்கள் குஷ்புவிற்கு கோயில் கட்டினர். அதன் பின்னர் நயன்தாராவுக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டினர். இதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் ரசிகர்கள் கோவில் கட்டியதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ஈஸ்வரன் பட நடிகை நித்தி அகர்வாலுக்கும் சென்னையில் ரசிகர்கள் சிலர் கோடி கோவில் கட்டி சிலை வைத்திருக்கின்றனர்.
நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நித்தி அகர்வால் நடித்திருந்தார். இவர் ஒரு நடிகை மட்டும் இல்லாமல் டான்சர், மாடலிங் என வலம் வருபவர்.
ஹிந்தியில் முன்னா மைக்கேல் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான நித்தி அகர்வால் தெலுங்கில் மிஸ்டர் மஞ்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் அவர் தமிழில் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த நித்தி அகர்வாலின் தீவிர ரசிகர்கள் சிலர் அவருக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
Actress Nidhi Agarwal fans built a temple for her in Chennai on Valentine's Day. Fans anointed her statue and cut a cake to celebrate the Day. The photos went viral on social media. with hashtag #NationalCrush on Twitter. #NidhiAgarwal pic.twitter.com/ie4mCyW9cV
— Newsroom Post (@NewsroomPostCom) February 15, 2021
இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. இது குறித்து பேசிய நித்தி அகர்வால் இந்த விவகாரம் தெரிந்ததும் தனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததாகவும், இது தனக்கு கிடைத்த மிக சிறந்த காதல் பரிசு என்றும் தன் ரசிகர்களை,தான் மிகவும் நேசிப்பதாகவும் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் உண்டாவதாகவும், மனம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த ரசிகர்களுக்கு நன்றியும் கூறி இருக்கிறார்.
ALSO READ: வலிமை 'அப்டேட்' கேட்கும் ரசிகர்கள்.. நடிகர் 'அஜித்' வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!