GV Prakash: பிரபல இளம் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே பேசியுள்ள பேச்சு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர்
இளம் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், தம்முடைய இசையால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். முன்னணி நடிகர்களுடனும், முன்னணி பாடலாசிரியர்களுடனும் மற்றும் முன்னணி திரைப்படங்களிலும் என பல விதமாகவும் பணிபுரிந்துள்ள ஜீ.வி.பிரகாஷின் பாடல்கள் பலவும் ஹிட் ஆகியுள்ளன. அவருடைய பாடல்களை பலரும் தங்களது விருப்பமான ப்ளே லிஸ்டில் வைத்துள்ளனர்.
நடிகராக..
அதன் பின்னர் டார்லிங் திரைப்படம் மூலம் நடிகராக மலர்ந்த ஜீ.வி.பிரகாஷ் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இப்படி நடிகராகவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கத் தொடங்கியுள்ள நடிகர் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான சமீப கால திரைப்படங்களாக ஜெயில் மற்றும் பேச்சுலர் திரைப்படங்களை குறிப்பிட முடியும்.
சமீபத்திய திரைப்படங்கள்..
ஜெயில் திரைப்படமும், பேச்சுலர் திரைப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், விமர்சன ரீதியாக நல்ல படைப்புகளாகவும் பாராட்டுக்களையும் பெற்றுவருகின்றன. இந்நிலையில் தான் ஜீ.வி.பிரகாஷ் தமது ரசிகர்களிடையே பேசியுள்ள நெகிழ்ச்சியான பேச்சுவார்த்தை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்க்கு இருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தினரும் அவரை அவரது சமூக வலைத்தளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். ஜீ.வி.பிரகாஷூம் தமது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாகவும் இருக்கிறார்.
நாதஸ்வரக் கலைஞரை தேடி..
கொஞ்ச நாளைக்கு முன்பாக முக்கிய நகரத்தின் தெருக்களில், பூம் பூம் மாட்டுடன் நடந்து நாதஸ்வரம் வாசித்து வந்த கலைஞர் ஒருவரின் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு, சுருதி லயம் பிசகாமல் வாசிக்கும் இந்த கலைஞரை கண்டுபிடித்து சொல்லுங்கள் என பொதுமக்களிடம் கேட்டிருந்தார். ரசிகர்களும் உடனே அவர் யாரென கண்டுபிடித்து ஜீ.வி.பிரகாஷ்க்கு தகவல் கொடுக்க, பெங்களூரைச் சேர்ந்த அந்த கலைஞரை பயன்படுத்திக்கொள்வதற்கான பணி நடப்பதாக குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
ரசிகரின் கவலை
இப்படி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜீ.வி.பிரகாஷ், தமது புகைப்படங்களை அவ்வப்போது தமது சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அப்படி ஒரு புகைப்படத்தை இவர் தற்போது தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்துக்கு கீழே ரசிகர் ஒருவர், ‘ஹாய் சொல்லுங்க அண்ணா.. நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கேன்!” என கேட்டிருக்கிறார்.
ஜீ.வி.பிரகாஷின் நெகிழ்ச்சி செயல்..
அதற்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், உடனே சென்று “விஷயங்கள் சரியாகிவிடும். கவலைப்படாதீர்கள்!” என பதிலளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் பலருடைய உரையாடல்களுக்கும் பல நேரங்களிலும் பல பதிவுகளிலும் ஜீ.வி.பிரகாஷ் எப்போதுமே ரெஸ்பான்ஸ் செய்வதாகவும் குறிப்பிட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
"நடிச்ச 4-ம் Flopங்க".. ஐயோ சிரிக்குறாங்களே.. ஒரே நாள்ல fans-ஐ அள்ளிய பிரபல நடிகரின் பேத்தி! CWC 3
தளபதி விஜய்.. நண்பனுக்காக Bigg Boss பார்த்து.. "வெளில வந்தாப்றம் என்ன சொன்னாரு? Exclusive