www.garudavega.com

காதலிக்காக ஐ போன் கேட்ட வேடிக்கை நபர்! வறுக்கும் நெட்டிசன்ஸ்! சோனு சூட்டின் வைரல் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

fan asked i phone for his girl friend to sonu sood

கொரோனா நெருக்கடியில் தவித்து வந்த பல மக்களுக்கு பல உதவிகளை செய்து நிஜ ஹீரோவாக திகழும் நடிகர் சோனு சூட், ஏழை மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்தார். குறிப்பாக ஊரடங்கு சமயத்தில் சொந்த செலவில் ஏராளமான பேருந்துகளை புலம் பெயர்ந்தோருக்காக ஏற்பாடு செய்து கொடுத்தார். அண்மையில் கூட ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறையால் தவித்த மக்களுக்காக உடனடியாக உதவி செய்தார்.

fan asked i phone for his girl friend to sonu sood

குறிப்பாக சமூக வலைதளம் மூலம் தமது உதவியை நாடுபவர்களுக்கு உடனடியாக ஆவன செய்யும் சோனு சூட், எப்போதும் ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலமாக ஆக்டிவாக இருந்தார். இந்நிலையில் தான் இளைஞர் ஒருவர் வித்தியாசமான ஒரு கோரிக்கையுடன் சோனு சூட்டை அணுகியுள்ளார். ஆம், இன்ஜினியர் லட்கா (Engineer Ladka) என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், தனது காதலி தம்மிடம் ஐபோன் கேட்பதாகவும், அவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்றும் நடிகர் சோனு சூட்டிடம் கேட்டுள்ளார்.

fan asked i phone for his girl friend to sonu sood

இதற்கு வேடிக்கையாக பதில் அளித்த சோனு, ‘ஒருவேளை உங்கள் காதலிக்கு அவர் விரும்பியபடி நீங்கள் ஒரு ஐபோனையே பரிசாக வாங்கிக்கொடுத்தால், அதன் பின்னர் உங்களிடம் எதுவும் மிச்சம் இருக்காது!’ என்று கூறி, கூடவே ஒரு ஸ்மைலி எமோஜி ஒன்றையும் பதிவிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.

ALSO READ: வெற்றிமாறன் கதை வசனத்தில் பிரபல 'நடன' ஹீரோ! இயக்குநர், தயாரிப்பாளர் இவங்களா?

இதனிடையே இப்படியான கொரோனா காலத்தில் அனைவரின் கோரிக்கைக்கும் உதவிவரும் சோனு சூட்டிடம் போய் இப்படி ஒரு உதவியை கோரிய அந்த ட்விட்டர் யூஸரை நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

காதலிக்காக ஐ போன் கேட்ட வேடிக்கை நபர்! வறுக்கும் நெட்டிசன்ஸ்! சோனு சூட்டின் வைரல் பதில்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Fan asked i phone for his girl friend to sonu sood

People looking for online information on Breaking, Fan, Internet, Sonu Sood, Trending, Tweet, Viral will find this news story useful.